உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
47 பார்வைகள்

மன்னாரில் காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம் நேற்று புதன்கிழமை (13) மற்றும் இன்று வியாழக்கிழமை (14) ஆகிய இரு தினங்களும் மாலை வேளையில் மன்னாரில் உள்ள சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தில் இடம்பெற்றது.

காணி தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக ஆலோசகர் ஓய்வு பெற்ற உதவி காணி ஆணையாளர் க. குருநாதன் இலவச ஆலோசனைகளை வழங்கினார்.

இதன்போது காணி கொள்வனவு, காணி விற்பனை, தனியார் காணி ஆவணங்கள், அரசு காணி ஆவணங்கள், லீஸ் காணி தொடர்பான விடயங்கள், புதிய காணிக்கான விண்ணப்ப நடைமுறைகள், காணி விற்பனையின் போது கவனிக்க வேண்டிய விடயங்கள், காணி தொடர்பான ஏனைய சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.

இதன்போது குறித்த இரு தினங்களும் காணி விடயங்களால் பாதிக்கப்பட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனைகளை பெற்றுக் கொண்டனர்.

இதன்போது சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் முசலிப் பிரதேசத்தில் காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு இன்று (14) நடைபெற்றது.

இந் நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக முக்கியத்துவம் பெற்று வரும் காணி தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் நிர்வாக செயல்முறைகள் குறித்து சிவில் சமூகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்தில் செயற்பட்டு வரும் சிவில் சமூக அமைப்புகள், சமூக அடிப்படையிலான அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அமைப்புகள், கிராம மட்ட பிரதிநிதிகள், காணி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், காணி உரிமைக்காக விண்ணப்பித்தவர்கள் பலவந்தமாக காணிகளை இழந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இச் செயலமர்வில் பங்கேற்று பயனடைந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0