உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரான் – அமெரிக்க மோதலால் முடங்கியுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீட்க 40 நாடுகள் ஒன்றிணைந்து விசேட நடவடிக்கை!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

சர்வதேச அளவில் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்கும் நோக்கில், பிரித்தானியா தனது போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அனுப்பத் தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி (John Healey) இது குறித்துத் தெரிவிக்கையில், ‘டைபூன்’ (Typhoon) போர் விமானங்கள், ஆளில்லா ட்ரோன் படகுகள் மற்றும் ‘எச்.எம்.எஸ் டிராகன்’ (HMS Dragon) என்ற நாசகாரி போர்க்கப்பல் ஆகியவை இந்த கூட்டுப் பணியில் ஈடுபடுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

இதற்காக 115 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதலால் ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 நாடுகள் ஒன்றிணைந்து இந்த தற்காப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

உலக எரிபொருள் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள இப்பாதையை மீண்டும் திறப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு உள்நாட்டில் அரசியல் நெருக்கடி நிலவும் சூழலில், சர்வதேச பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

94 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

91 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0