உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

ருகிராமில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான மாநிலங்களவை உறுப்பினர், இந்த ஆண்டு ஜனவரி முதல் வைத்தியாசலையில் அனுமதிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

இந்திய ஊடகங்களின்படி, சோனியா காந்தி இன்று (13) காலை குருகிராமில் உள்ள மெடாந்தா – தி மெடிசிட்டி வைத்தியசாலையில் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் மாத தொடக்கத்தில், அவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, புது டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், உடல் முழுவதும் பரவியிருந்த நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது, அதற்காக அவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ஓரிரு நாட்கள் வைத்தியசாலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். இதற்கு முன்பு, அவர் வழக்கமான பரிசோதனைக்காக சர் கங்கா ராம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மார்பு நோய் நிபுணரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

சோனியா காந்திக்கு நாள்பட்ட இருமல் பிரச்சினை உள்ளது, குறிப்பாக நகரத்தில் நிலவும் இந்த மாசுபாட்டின் காரணமாக அவர் தொடர்ந்து பரிசோதனைகளுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று வைத்தியசாலை வட்டாரம் கூறியுள்ளது. சோனியா காந்தி 2025 டிசம்பரில் தனது 79-வது பிறந்தநாளைக் கொண்டாடியமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

46 0 0