உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வாரம் 100 மில்லியன் பெரல் எண்ணெய் இழப்பு!

உலக செய்திகள் 4 மாதங்கள் முன்
53 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடைகள் இதே வேகத்தில் தொடர்ந்தால், சர்வதேச சந்தையில் ஒவ்வொரு வாரமும் சுமார் 100 மில்லியன் பெரல் மசகு எண்ணெய் இழப்பு ஏற்படும் என்று சவுதி அராம்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர் எச்சரித்துள்ளார்.

தற்போது நிலவும் இந்த முடக்கம் இன்னும் சில வாரங்களுக்கு நீடித்தால், எண்ணெய் விநியோகம் சீரடைய அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். வழக்கமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக நாளொன்றுக்கு சுமார் 70 கப்பல்கள் பயணிக்கும் நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை வெறும் 2 முதல் 5 ஆகச் சரிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


ஈரான் – அமெரிக்கப் போர் சூழலால் உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை அராம்கோ தலைவரின் இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் எரிபொருள் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0