உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் அமைக்கப்படும் கடலோரப் பூங்காவை பார்வையிட்ட வடமாகாண சுற்றுலா அதிகார சபை தலைவர்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
50 பார்வைகள்

மன்னார் நகரசபையின் மேற்பார்வையில், மன்னார் நுழைவாயில் பாலத்திற்கு அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடலோரப் பூங்காவின் (Coastal Park) முதற்கட்டப் பணிகளை வடமாகாண சுற்றுலா அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டனர்.

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதி பங்களிப்புடன், மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் இந்தப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இப்பூங்காவின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதனை பார்வையிட்ட அதிகாரிகள் கட்டுமானத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, தரைத்தளம் மற்றும் பூங்காவின் அழகுபடுத்தல் பணிகளில் காணப்படும் பலவீனங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்ட குழுவினர், அவற்றைச் சீர் செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.

இது குறித்து வட மாகாண சுற்றுலாப் பணியக தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் நகரசபைக்கு உட்பட்ட மன்னார் கோஸ்டல் பார்க் (Coastal Park) பகுதியை பார்வையிட்டோம். மன்னார் நுழைவாயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இது, மாலை நேரங்களில் மக்கள் வந்து செல்லக்கூடிய ஒரு அழகான இடமாகும்.

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதியுதவியுடன் முதற்கட்டப் பணிகள் இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், தற்போது செய்யப்பட்டுள்ள பணிகள் எங்களுக்கு முழுமையான திருப்தி இல்லை.

சில கட்டுமானக் குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி, இரண்டாம் கட்டப் பணிகளின் போது இப்பூங்காவை இன்னும் மெருகூட்டி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதியவர்கள் அமைதியாக பொழுது போக்கும் இடமாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் மன்னார் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0