திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்.!
மட்டக்களப்பு மண்முனை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இவ்விபத்தில் எவருக்கும் எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள கொக்கட்டிச்சோலை மண்முனை வீதியில் நேற்று இரவு 7 மணியளவில் கொக்கட்டிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்த வேன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்துள்ளது.
வேனில் பயணித்த எவருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
அத்துடன் வேன் முற்றாக எரிந்துள்ளதாகவும் தடயவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


