உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

குஜராத் பெண் கொ*லையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது!

இந்திய செய்திகள் 4 மாதங்கள் முன்
71 பார்வைகள்

குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தைச் சேர்ந்த ஷம்​சுதீன் முசாஜி கெடா​ வாலா​வுக்​கும் அவருடைய மனைவி பர்சானா​வுக்​கும் இடையே பிரச்​சினை ஏற்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது.

இதனால், ஷம்​சுதீன், அவரது சகோ​தரர் இக்​பால் கெடா​வாலா மற்றும் இரு கூட்​டாளி​களு​டன் இணைந்து பர்​சா​னாவைக் கொ*லை செய்​துள்​ளனர். அதற்​குப் பிறகு பல ஆண்​டு​களாக அந்தக் குடும்பத்​தினர் குற்ற உணர்ச்​சி​யாலும், கொல்​லப்​பட்ட பெண்ணின் நிழல் தங்​களைத் துரத்​து​வ​தாக ஏற்​பட்ட மாயையாலும் கடும் பீதி​யில் இருந்​துள்​ளனர்.

அந்த ஆவி​யிட​மிருந்து விடுபட அவர்​கள் மாந்​திரீகர்​களை நாடியுள்​ளனர். அந்த மாந்​திரீகர்​கள் சடங்​கு​கள் செய்​த​போது, 1992-ல் நடந்த இக்​கொ*லை குறித்த விவரங்​கள் கசிந்​து, இறு​தி​யில் அகம​தா​பாத் குற்​றப்​பிரிவு போலீ​ஸாரைச் சென்​றடைந்​துள்​ளது.

இதையடுத்​து, ஷம்​சுதீன் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் நடத்​திய விசா​ரணை​யின் அடிப்​படை​யில், பர்​சா​னாவை புதைத்த இடத்திலிருந்து அவருடைய எலும்​புக்​கூட்டை தோண்டி எடுத்துள்ளனர். டிஎன்ஏ பரிசோதனை​யில் அது பர்​சா​னா​வின் எலும்​புக்​கூடு என தடய​வியல் சோதனை​யில் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்​து, ஷம்​சுதீன் முசாஜி கெடா​வாலா (61) மற்​றும் இக்​பால் முசாஜி கெடா​வாலா (63) ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். அப்​துல் கரீம் யாகூப்ஜி ஜவரா​வாலா மற்​றும் ஷாலி​யாபிபி சமுட்​கான் பதான் ஆகிய இரு​வர் மீதும் வழக்​குப்​ பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0