உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தனியார் பேருந்து உரிமையாளருக்கு தண்டப்பணம் விதிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
47 பார்வைகள்

மன்னார் – முள்ளிக்குளம் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று முன்னறிவித்தல் இன்றி சேவையில் ஈடுபடாமை மற்றும் பயணிகளுடன் குறித்த பேருந்தின் நடத்துனர் முரண்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, பேருந்து உரிமையாளருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த தனியார் பேருந்து முன் அறிவிப்பு ஏதுமின்றி தனது சேவையை புறக்கணித்தமையால், அந்த வழித்தடத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் என பலரும் வீதியில் காத்திருந்து பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

அத்துடன், சேவை புறக்கணிப்பு தொடர்பில் கேள்வியெழுப்பிய பயணிகளுடன் குறித்த பேருந்தின் நடத்துனர் முறையற்ற விதத்தில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி முரண்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணிகளால் அதிகார சபைக்கு கொண்டுவரப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், போக்குவரத்து அதிகார சபை ஊடாக துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசாரணையின் முடிவில், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் விதிமுறைகளை மீறி, பயணிகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் சேவையை துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றங்களுக்காக குறித்த தனியார் பேருந்துக்கு 4,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

அத்துடன், இனிவரும் காலங்களில் பயணிகள் சேவையின் போது இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால், குறித்த பேருந்தின் சேவை அனுமதிப்பத்திரம் முற்றாக இரத்து செய்யப்படும் எனவும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பொதுப் போக்குவரத்தின் போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரால் முறைகேடுகள் இடம்பெற்றாலோ அல்லது அதிக கட்டணம் அறவிடப்பட்டாலோ, பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள்) அதிகார சபையின் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாக தெரியப்படுத்த முடியும் என அதிகார சபை மீண்டும் வலியுறுத்துகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0