சென்னையில் தரையிறங்க முடியாமல் நடுவானிலேயே வட்டமிடும் விமானங்கள்!
சென்னையில் திடீரென பெய்த கனமழையினால் சென்னையில் பல்வேறு பகுதிகள் ஸ்தம்பித்துள்ளதுடன், விமானச்சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், இன்று 09 ஆம் திகதி கனமழை பெய்துள்ளது.
இதன் காரணமாக மீனம்பாக்கம் விமான நிலையத்தின் செயல்பாடுகளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து வந்த 5 விமானங்கள் கனமழையால் தரையிறங்க முடியாமல் நடுவானிலேயே வட்டமடித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாகவே புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.