உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்து – பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்திருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளதால், அவர் பல வாரங்களாக பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் உடனான போர் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக கூறப்படுகிறது. ரஷ்ய செல்வந்தர்கள் சிலர், அவரது ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாகவும், அவரது உயிருக்கு ஆபத்திருப்பதாகவும் உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இதனால், தலைநகர் மாஸ்கோவை விட்டு வெளியேறி, பல வாரங்களாக பதுங்கு குழியில் ஜனாதிபதி புடின் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, பிரபல செய்தி நிறுவனமான, ‘பினான்சியல் டைம்ஸ்’ அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, உக்ரைனின், ‘ஆப்பரேஷன் ஸ்பைடர்வெப்’ என்ற ட்ரோன் தாக்குதல் நடவடிக்கைக்கு பின், புடின் கடும் அச்சத்தில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ‘கடந்த மார்ச் முதல், புடினின் பாதுகாப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள நவீன மயமாக்கப்பட்ட ரகசிய பதுங்கு குழியில் இருந்தே, அவர் தற்போது போரை வழிநடத்தி வருகிறார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை வல்லரசு நாட்டின் தலைவராக வலம் வந்த புடின், இன்று தன் சொந்த நாட்டு ராணுவத்தையும், உக்ரைன் ட்ரோன்களையும் கண்டு அஞ்சி, பதுங்கு குழிக்குள் அடைக்கலமாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0