உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வைரஸ் பாதித்த சுற்றுலா கப்பல்: பிரித்தானியர்களை மீட்க அதிரடி நடவடிக்கை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த சுற்றுலா கப்பல் ஒன்றில் ‘ஹான்டா வைரஸ்’ (Hantavirus) தொற்று பரவியுள்ள நிலையில், அதில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது.

‘எம்.வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற டச்சு நாட்டு சுற்றுலா கப்பலில் ஹான்டா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அதில் உள்ள எஞ்சிய 22 பிரித்தானியர்களை விசேட விமானம் மூலம் பாதுகாப்பாக அழைத்து வர பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது. இக்கப்பலில் பயணித்தவர்களில் இதுவரை ஐந்து பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தொற்றினால் உயிரிழந்த மூன்று பயணிகளில் ஒருவருக்கு ஹான்டா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதேவேளை, பாதிக்கப்பட்ட பிரித்தானியர்களில் இருவர் நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூன்றாவதாக ஒரு பிரித்தானியர், கடந்த ஏப்ரல் நடுப்பகுதியில் கப்பல் நின்ற அட்லாண்டிக் பெருங்கடலின் திரிஸ்தான் டா குன்ஹா (Tristan da Cunha) தீவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் இந்தக் கப்பல் நாளையத்தினம் ஸ்பெயினின் டெனெரிஃப் (Tenerife) தீவுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பல் கரைக்கு வந்ததும், ஸ்பானிய அதிகாரிகள் அனைத்து பயணிகளுக்கும் வைரஸ் பரிசோதனை செய்வதுடன் அறிகுறி உள்ளவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்.

அறிகுறி இல்லாதவர்கள் உடனடியாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட விசேட விமானம் (Charter flight) மூலம் அன்றைய தினமே பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்படுவர்.

தற்போது கப்பலில் உள்ள எஞ்சிய பிரித்தானியர்களுக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லை என்ற போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் நாடு திரும்பியதும் 45 நாட்கள் வீடுகளிலோ அல்லது தகுந்த இடங்களிலோ தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், சுய பரிசோதனைகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0