உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழுதிய முதியவர்!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
48 பார்வைகள்

உத்தர பிரதேசம் லக்​னோவைச் சேர்ந்​தவர் அசோக் பாஹர்​(71). உத்​த​ராகண்​டில் உள்ள இந்​திய மருந்​துள் நிறு​வனத்​தில் (ஐடிபிஎல்) மார்க்​கெட்​டிங் பிரிவு தலை​வ​ராக​வும், வெளி​யுறவுத்​துறை​யில் ஆலோ​சக​ராக​வும் பணி​யாற்றி விருப்ப ஓய்வு பெற்​றுள்​ளார். இவரது மனைவி டாக்​டர். மஞ்சு பாஹர் மகப்​பேறு மருத்​து​வர்.


அசோக் பாஹரின் தந்​தை​யும் லக்​னோ​வில் பிரபல மருத்​து​வ​ராக இருந்​தவர். அதனால் இவரும் மருத்​து​வ​ராக வேண்​டும் என இவரது தாய் விரும்​பி​யுள்​ளார். ஆனால், மருத்​துவக் கல்​லூரி நுழைவுத் தேர்​வு​களில் இவரால் வெற்றி பெற முடிய​வில்​லை. இவரது குடும்ப உறுப்​பினர்​கள் மற்​றும் உறவினர்​கள் சுமார் 20 பேர் மருத்துவர்களாக உள்​ளனர். பலர் வெளி​நாடு​களில் பணியாற்றுகின்​றனர்.

அதனால் தனது மருத்​து​வர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழு​தி​யுள்​ளார் அசோக் பாஹர். இவர் மருத்​து​வ​ராகி ஹெபடாலஜி படிப்பை முடித்து கல்​லீரல் நோய் நிபுண​ராக வேண்டும் என விரும்​பு​கிறார். 71 வயதில் இவர் நீட் தேர்வு எழுதும் செய்தி சமூக ஊடகங்​களில் வேக​மாக பரவியது.

பலர் இவரது முயற்​சியை ஊக்​கு​வித்​தா​லும், சிலர் இந்த வயதில் மருத்​துவப் படிப்​பது வீண், காலம் கடந்த செயல் என்​றும் மற்றொரு​வரின் மருத்​து​வர் சீட் வாய்ப்பை கெடுப்​பது போன்​றது எனவும் தங்​கள் கருத்​துக்​களை பதிவு செய்​துள்​ளனர்​.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0