உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வரும் ராஜா சுப்ரமணி, வரும் மே 30-ம் தேதி புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்பார். தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகான் ஓய்வு பெறும் நிலையில் ராஜா சுப்ரமணி அந்த பதவியில் அமர உள்ளார்.


இந்திய ராணுவத்தின் துணை தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு, இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளில் நிலவும் பாதுகாப்புச் சூழல்கள் குறித்து ஆழமான புரிதலும் அனுபவமும் உண்டு. ஏறக்குறைய 39 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய இவர், லக்னோவில் உள்ள மத்திய ராணுவ கட்டளையின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், வரும் மே 31-ஆம் தேதி பொறுப்பேற்பார். தற்போதைய தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதிக்கு பிறகு இவர் பொறுப்பேற்கவுள்ளார்.

1987-ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்த இவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர் முறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல், ஐஎன்எஸ் மைசூர் உள்ளிட்ட போர்க்கப்பல்களுக்குத் தலைமை தாங்கிய அனுபவம் இவருக்கு உண்டு.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு அதிகாரிகளுமே தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர்கள் ஆவர். லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ளார்.

அதேபோல், வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள உயரிய ராணுவக் கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பாதுகாப்புத் துறையில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இரு அதிகாரிகளின் நியமனம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

44 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

43 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0