உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

“9 போர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்” – ட்ரம்ப் பெருமிதம்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, தான் தீர்த்து வைத்த பத்தாவது போராக இதை மாற்ற விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தற்காலிக அமைதி நீண்ட காலப் போர்நிறுத்தத்துக்கான தொடக்கமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றியை நினைவுகூரும் வகையில் ரஷ்யாவில் கொண்டாடப்படும் வெற்றி தினத்தை முன்னிட்டு, மே 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களுக்குப் போர்நிறுத்தம் செய்ய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்தப் போரில் உக்ரைனுக்கும் முக்கியப் பங்கு இருந்ததைச் சுட்டிக்காட்டிய ட்ரம்ப், தனது நேரடி வேண்டுகோளை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார்.


இந்த மூன்று நாள் போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளும் தலா 1,000 கைதிகளைப் பரிமாறிக் கொள்ளவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போர் குறித்து கவலை தெரிவித்த ட்ரம்ப், “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மனித உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்ட மிக மோசமான போர் இது.

இந்தப் போரில் மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் இளம் வீரர்கள் கொல்லப்படுகின்றனர். நான் ஏற்கனவே எட்டு அல்லது ஒன்பது போர்களைத் தீர்த்து வைத்துள்ளேன். இந்தப் போரை நான் முடிவுக்குக் கொண்டுவரும் பத்தாவது போராகப் பார்க்க விரும்புகிறேன்” என்று ட்ரம்ப் கூறினார்.

இந்த மூன்று நாள் போர்நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க தான் விரும்புவதாகவும், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0