உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து; 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

ஸ்காட்லாந்தின் ருதர்கிளென் (Rutherglen) பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கரத் தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று மாலை 6:00 மணிக்குப் பின்னர் , பார்டோனால்டு வீதியில் (Baronald Street) உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நான்கு மாடி குடியிருப்பு ஒன்றின் தரைதளத்தில் அமைந்துள்ள அங்காடியின் பாதாள அறையில் (Basement) இந்தத் தீ முதலில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது.

ஸ்காட்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் (SFRS) சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 22 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இன்று (வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி, 6 தீயணைப்பு வாகனங்கள் இன்னும் அவ்விடத்தில் முகாமிட்டுத் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

தீ விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி பார்டோனால்டு வீதி, டால்மார்னாக் வீதி (Dalmarnock Road) மற்றும் ஃபார்ம்லோன் வீதி (Farmeloan Road) ஆகிய முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் அடர்ந்த புகை சூழ்ந்துள்ளதால், உள்ளூர்வாசிகள் தங்களது வீடுகளின் ஜன்னல்களை மூடி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. தீ விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0