உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
89 பார்வைகள்

கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் உள்ள பிராக்வில் (Brockville) பகுதியில், ஒரே வீட்டில் மூன்று பேர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒண்டாரியோவின் பிராக்வில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில், கார்டியர் கோர்ட் (Cartier Court) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த பொலிஸார், வீட்டிற்குள் மூன்று பேர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டெடுத்தனர்.

விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், நகரின் புறநகர்ப் பகுதியில் இருந்த 17 வயது சிறுவனைப் பொலிஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். கொலை செய்யப்பட்டவர்களுக்கும், கைது செய்யப்பட்ட சிறுவனுக்கும் இடையே ஏற்கனவே அறிமுகம் இருந்ததாகவும், இது தற்செயலாக நடந்த சம்பவம் அல்ல என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“இந்த விசாரணை மிகவும் உணர்வுப்பூர்வமானது மற்றும் சிக்கலானது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பை நாங்கள் உணர்கிறோம்” என பொலிஸார் தங்களது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவன் இன்று (வெள்ளிக்கிழமை) பிணை விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கனடாவின் ‘இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின்’ (Youth Criminal Justice Act) கீழ் அந்தச் சிறுவனின் அடையாளத்தை வெளியிட முடியாது என்பதால், பெயர் விபரங்களை பொலிஸார் ரகசியமாக வைத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0