உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

திடீரென இடிந்து விழுந்த கட்டிடத்தின் மேல் பாகங்கள்; மாணவிகள் படுகாயம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
47 பார்வைகள்

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன நிறுவகத்தின் மாடி கட்டிடத்தின் மேல் பாகங்கள் இடிந்து வீழ்ந்ததில் நடனப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இறுதி வருட மாணவிகள் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (6) இடம்பெற்றுள்ளது.

குறித்த கட்டிடம் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் மேல் மாடி கட்டிடமாக நிர்மாணிக்க திட்டமிட்டு கீழ் பகுதி மட்டும் நிர்மாணிக்கப்பட்ட நிலையில், இந்த கட்டிடம் உறுதியானது அல்ல என்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மத்தியில் மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று இறுதியாண்டு மாணவிகள் நடன பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மாடிக் கட்டிடத்தின் மேல் தரையின் ஒரு பகுதி இடிந்து அவர்கள் மீது வீழ்ந்துள்ளதையடுத்து 3 மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கட்டிட நிர்மானிக்கப்பட்ட தரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அதன் பொறியியலாளர் கடமையை இராஜனாமா செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

63 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0