உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஹோண்டியஸ் சுற்றுலா கப்பலில் ஹன்டா வைரஸ் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

ஆர்ஜென்டினாவிலிருந்து புறப்பட்ட எம்.வி ஹோண்டியஸ் (MV Hondius) சுற்றுலா கப்பலில், ஹன்டா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில், அதிலிருந்து முன்னதாகவே வெளியேறிய இரு பிரித்தானியர்கள் தற்போது தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

சென்.ஹெலினா (St Helena) தீவில் கப்பலை விட்டு இறங்கிய இவர்கள், ஜொகன்னஸ்பர்க் வழியாக பிரித்தானியா திரும்பியுள்ளனர்.

கப்பலில் வைரஸ் பாதிப்பு இருப்பதை அறிந்தவுடன் அவர்கள் அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட நிலையில், தற்போது அறிகுறிகள் ஏதுமின்றி சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
இவர்களுடன் பயணத்தின் போது தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியில் சர்வதேச சுகாதார அமைப்புகளுடன் இணைந்து பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகம் (UKHSA) ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில், தற்போது கப்பலில் இருக்கும் மற்ற பிரித்தானியப் பயணிகள், அறிகுறிகள் இல்லாத பட்சத்தில் கேனரி தீவுகளில் (Canary Islands) இருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர்.

அவர்கள் வைரஸ் பாதிப்பு காலத்தைப் பொறுத்து ஆறு வாரங்கள் வரை தனிமைப்படுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவது மிகவும் அரிது என்பதால், பொதுமக்களுக்குப் பெரிய அளவில் ஆபத்து இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயணிகளைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், ஆர்ஜென்டினாவிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பு புறப்பட்ட எம்.வி ஹோண்டியஸ் (MV Hondius) என்ற சுற்றுலா கப்பலில் ஹான்டாவைரஸ் (Hantavirus) தொற்று பரவியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த வைரஸ் பாதிப்பால் கப்பலில் பயணம் செய்த மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது வரை மொத்தம் எட்டு பேருக்கு (3 உறுதிப்படுத்தப்பட்டவை, 5 சந்தேகிக்கப்படுபவை) தொற்று இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது. இந்த வைரஸின் தோற்றம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், பொதுவாக ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு இந்த வகை வைரஸ் பரவுவது அரிது என்று சுகாதார நிபுணர்கள் விளக்குகின்றனர்.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிப்பு கண்டறியப்படுவதற்கு முன்பே கப்பலில் இருந்து இறங்கிச் சென்ற பயணிகளைக் கண்டறியும் பணிகளில் பிரித்தானியா, சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

98 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0