உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு – நாளை வெளியாகிறது முடிவுகள்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
62 பார்வைகள்

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்திற்கான (Holyrood) தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. புதிய ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றது.

தபால் மூலம் ஏற்கனவே வாக்களித்தவர்களைத் தவிர, ஏனைய வாக்காளர்கள் இன்று காலை முதல் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இன்று காலை 07:00 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, இரவு 22:00 மணி வரை இடைவிடாது நடைபெறும்.

இங்கிலாந்தைப் போலன்றி, ஸ்காட்லாந்தில் வாக்காளர்கள் வாக்குச் சாவடியில் எவ்வித அடையாள அட்டையையும் (ID) சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் சில தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், மொத்த நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை 129 ஆக மாற்றமின்றித் தொடர்கிறது. இவற்றில் 73 உறுப்பினர்கள் உள்ளூர் தொகுதிகளிலிருந்தும், மீதமுள்ள 56 உறுப்பினர்கள் பெரிய பிராந்தியங்களிலிருந்தும் (Regional seats) தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

வழமையாக வாக்குப்பதிவு முடிந்ததும் நள்ளிரவிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஆனால், இம்முறை செலவுகளைக் குறைக்கவும், மக்கள் ஈடுபாட்டை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதால், நாளை காலை 09:00 மணிக்கே வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகும்.

இதனால் தேர்தலின் முதல் முடிவுகள் நாளை பிற்பகலிலேயே எதிர்பார்க்கப்படுகின்றன. ஸ்காட்லாந்தின் மொத்த வாக்காளர்களில் ஐந்தில் ஒருவர் ஏற்கனவே தபால் மூலம் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

2021 கொவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, ஒரு முழுமையான ஜனநாயகச் சூழலில் நடைபெறும் இந்தத் தேர்தல் ஸ்காட்லாந்தின் எதிர்கால அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் மிக முக்கிய தேர்தலாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0