உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

விமான எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை: பயணிகளுக்கு பிரித்தானிய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
42 பார்வைகள்

பிரித்தானியாவில் விமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் பயணிகள் தமது பயணங்களை ரத்து செய்ய வேண்டாம் என அந்நாட்டு போக்குவரத்துத் துறை (DfT) வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் தற்போதைய நிலையில் விமான எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் நிலவவில்லை என்றும், அவசரத் தேவைகளுக்கான மாற்றுத் திட்டங்கள் தயாராக இருப்பதாகவும் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

எனவே, விடுமுறையைக் கழிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள் அச்சமடைந்து தமது விமானப் பயணங்களை ரத்து செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல் போக்கு காரணமாக விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், மே மாதத்தில் உலகளவில் சுமார் 13,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இது உலகளாவிய விமானச் சேவைகளில் வெறும் 1% மட்டுமே ஆகும். பிரித்தானியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இயக்கப்படும் விமானச் சேவைகள் இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை. முனிச் (Munich) மற்றும் இஸ்தான்புல் (Istanbul) ஆகிய நகரங்களே இந்த ரத்து நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘சிரியம்’ (Cirium) தரவுகள் தெரிவிக்கின்றன.

பயணிகள் தமது பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை உறுதிப்படுத்துமாறும், தகுந்த பயணக் காப்பீட்டை (Travel Insurance) வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் வெளிவிவகார அமைச்சின் (FCDO) அண்மைக்கால பயண வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0