உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரிஸ்டலில் காதலியை கொ*லை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

பிரித்தானியாவின் பிரிஸ்டல் (Bristol) பகுதியில் நடந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் பெண் ஒருவரும் அவரது முன்னாள் காதலனும் உயிரிழந்துள்ளனர்.

பிரிஸ்டல் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவத்தில் 35 வயதுடைய ஜோ ஷா (Jo Shaw) மற்றும் அவரது முன்னாள் காதலனான 41 வயதுடைய ரையான் கெல்லி (Ryan Kelly) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரையான் கெல்லி, தனது கையில் ஒரு வெடிக்கும் கருவியுடன் (Explosive device) பலவந்தமாக ஜோ ஷாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் இதன்போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஜோ ஷாவின் மரணத்தை பொலிஸார் ஒரு ‘கொ*லை’ (Homicide) சம்பவமாகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணிற்கும் பொலிஸாருக்கும் இடையே இந்தச் சம்பவத்திற்கு முன்னதாகவே பலமுறை தொடர்புகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, இதற்கு முன்னர் நடந்த சில குடும்ப வன்முறைச் சம்பவங்கள் (Domestic incidents) தொடர்பாக ஜோ ஷா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். இதனால், பொலிஸார் உரிய பாதுகாப்பு வழங்கினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

பிரித்தானியாவில் குடும்ப வன்முறையின் காரணமாக நிகழ்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0