உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
45 பார்வைகள்

அரசாங்கம் பாராமுகமாக செயற்படாமல் எல்லைப்புற கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர யானை வேலியை அமைக்க முன்வரவேண்டும் என போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட எல்லைப்புறக் கிராமங்களில் நிலவி வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாகச் சூரிய சக்தியிலான மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லாவெளி வட்டாரத்திலுள்ள விவேகானந்தபுரம் உள்ளிட்ட எல்லைக் கிராமங்களில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது.

இதனால் மக்கள் தமது நாளாந்த வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாமலும், இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

குறிப்பாக, கடந்த 02.05.2026 அன்று சுரவணையடியூற்று கிராமத்தில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகித் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யானை – மனித மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து இழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் அவர்களின் முயற்சியால் இந்த மின்விளக்குத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மின்சார வசதி இல்லாத மற்றும் யானை நடமாட்டம் அதிகம் காணப்படும் விவேகானந்தபுரம் – அம்மன்குளம் போன்ற பகுதிகளில் இன்று இந்தச் சூரிய சக்தி மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.

இதன் மூலம் இரவு வேளைகளில் யானைகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே அவதானித்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய தவிசாளர் வி. மதிமேனன் அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்.

“மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 96 கி.மீ தூரத்திற்கு யானை வேலி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும், போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு ஒரு கிலோமீற்றர் கூட ஒதுக்கப்படாமை கவலைக்குரியது. இப்பகுதி தொடர்பில் அரசாங்கம் பாராமுகமாகவே செயற்படுகின்றது.

எல்லைப்புற கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர யானை வேலியை அமைக்க வேண்டும்.

மேலும், ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் இந்தப் பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் வெல்லாவெளி வட்டார அமைப்பாளர் பிரதீப்குமார், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

65 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

60 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

65 0 0