உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
113 பார்வைகள்

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் மேற்கு வங்க முதலமைச்சர் பதவியை மம்தா பானர்ஜி இராஜினாமா செய்ய மறுப்பது, ஒரு அசாதாரணமான அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தேர்தலில் அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சியிடம் படு தோல்வியடைந்தது. மாநிலத்தின் 294 இடங்களில் பாஜக 207 இடங்களை கைப்பற்றியது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களை கைப்பற்றியது.

இந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில், வாக்குகள் பலவந்தமாகக் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், முழு வாக்குப்பதிவு செயல்முறையும் முறைகேடாக நடத்தப்பட்டதாகவும் நம்புவதால், முதலமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்து, தாம் இராஜினாமா செய்யப் போவதில்லை என முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நேற்று மே 05 ஆம் திகதி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது கட்சி தோல்வியடையவில்லை என்ற உறுதியை வெளிப்படுத்தினார்.

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டிய பானர்ஜி, அது இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் ஒரு “இருண்ட அத்தியாயத்தை” உருவாக்கியுள்ளது என்றும் கூறினார். மம்தா பானர்ஜியின் அறிக்கையை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 7 ஆம் திகதியுடன் முடிவடைவதால், அவர் இராஜினாமா செய்தாலும் செய்யாவிட்டாலும், அதன் பிறகு இந்த அவையில் யாரும் உறுப்பினராக இருக்க மாட்டார்கள் என்று பாஜக கூறியுள்ளது.

அதேநேரம், மே 9 ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் தனது முதல் அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளையும் பாஜக செய்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் : மு.க.ஸ்டாலின் பதிவு

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நீதிக்கட்சி பிறந்தது…

145 0 0
இந்திய செய்திகள்

மறைந்த எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (19) இரவு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

132 0 0
இந்திய செய்திகள்

‘ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ – வி.எஸ். பாபு மறைவுக்கு விஜய் உருக்கம்!

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது…

152 0 0
இந்திய செய்திகள்

தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு , உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் காலமானார்.…

149 0 0