உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
65 பார்வைகள்

ஹார்முஸ் நீரிணையின் வழியாகச் சிக்கித் தவிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டும் அமெரிக்காவின் நடவடிக்கை குறுகிய காலத்திற்கு இடைநிறுத்தப்படும் என்று ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை மே 5 ஆம் திகதி மாலை அறிவித்தார்.

ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டம் பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் நிறுத்தப்படும் என்றும் ட்ரம்ப் கூறினார்.

ஈரானில் அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டணியின் ஆரம்பகட்ட தாக்குதலான ‘Operation Epic Fury‘, அதன் இலக்குகளை அடைந்த பின்னர் முடிவுக்கு வந்துவிட்டதாக வொஷிங்டனின் வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ கூறிய நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமூக ஊடகப் பதிவு ஒன்றில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தானின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாக ட்ரம்ப் கூறினார்.

எனினும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ட்ரம்பின் பதிவைத் தொடர்ந்து, அமெரிக்க மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் $2.30 சரிந்து, ஒரு பீப்பாய்க்கு $100-க்கும் கீழே சென்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு மோதல் காரணமாக எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்ததிலிருந்து, இது பெரிதும் கவனிக்கப்பட்ட ஒரு வரம்பாகும்.

என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது அல்லது இந்த இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்த கருத்துக்கான கோரிக்கைக்கு வெள்ளை மாளிகை உடனடியாக பதிலளிக்கவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0