உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பஹ்ரைனுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்க உக்ரைன் முன்மொழிவு: ஸெலென்ஸ்கி அதிரடி!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
62 பார்வைகள்

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, பஹ்ரைன் மன்னர் ஷேக் ஹமத் பின் ஈசா அல் கலீஃபாவைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, பஹ்ரைனுக்குத் தேவையான அதிநவீன ட்ரோன்களை (Drones) வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை ஸெலென்ஸ்கி முன்மொழிந்தார். உக்ரைன் தினசரி அடிப்படையில் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாகவும், முழு அளவிலான தற்காப்புப் போரில் தங்களுக்குக் கிடைத்துள்ள அனுபவத்தை பஹ்ரைனுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்தச் சந்திப்பில் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழல் குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர். குறிப்பாக, பஹ்ரைன் மற்றும் பிற நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

உயிர்களைப் பாதுகாப்பதற்கும், தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் உக்ரைனின் தொழில்நுட்ப நிபுணத்துவம் பஹ்ரைனுக்குப் பெரிதும் உதவும் என ஸெலென்ஸ்கி உறுதியளித்தார்.

ஈரான்-அமெரிக்கப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனின் இந்தத் தூதரக முயற்சி சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0