உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தாக்குதல் அச்சுறுத்தல்: அமெரிக்கா எச்சரிக்கை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் நிலவுவதால், அங்குள்ள அமெரிக்கக் குடிமக்களை மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்றைய தினம் ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் இலக்கு வைக்கப்பட்டதாக அமீரக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

“வான்வழி அச்சுறுத்தல்கள் குறித்து அமீரக அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை அமெரிக்கக் குடிமக்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகத் தயாராக இருக்க வேண்டும்,” என்று தூதரகம் தெரிவித்துள்ளது.


அமீரகத்திற்கான பயண ஆலோசனையை அமெரிக்கா ‘நிலை 3’ இல் வைத்துள்ளது. அதாவது, குடிமக்கள் அங்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

தூதரகம் மற்றும் தூதரக அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கினாலும், அவசரத் தேவை இல்லாத அரசுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவங்கள் நிகழும்போது ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிக் கதவுகளுக்கு அருகில் இருப்பதைத் தவிர்க்குமாறும், போதுமான உணவு மற்றும் மருந்துகளை இருப்பு வைத்திருக்குமாறும் அமெரிக்கக் குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமீரக வான் பாதுகாப்புப் படையினர் ஈரானால் ஏவப்பட்ட 15 ஏவுகணைகளையும் 4 ட்ரோன்களையும் இடைமறித்து அழித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், புஜைரா (Fujairah) எண்ணெய் ஆலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0