உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
49 பார்வைகள்

உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் 78 பில்லியன் பவுண்ட் (106 பில்லியன் டொலர்) கடனுதவியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் பிரிட்டன் ஈடுபட உள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் அமெரிக்க அழுத்தத்தின் கீழ் ஐரோப்பிய பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

ஆர்மீனியாவின் தலைநகரான யெரெவனில் இன்று மே 4 ஆம் திகதி நடைபெறும். 2022 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர் அமைக்கப்பட்ட கலந்துரையாடல் மன்றமான ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் உச்சிமாநாட்டில், உக்ரேனுக்கு அத்தியாவசிய இராணுவ உபகரணங்கள் கிடைப்பதற்கு ஆதரவளிக்க ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் விரும்புவதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தக் கடன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உக்ரேனின் தேவைகளில் மூன்றில் இரண்டு பங்கைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

ரஷ்யாவின் நான்காண்டுப் போருக்கு எதிராக உக்ரேன் தன்னைத் தற்காத்துக் கொள்வதால், இந்தத் தொகையின் பெரும்பகுதி இராணுவச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் நிதியுதவி, குறிப்பாகப் பாதுகாப்புத் துறையில், உக்ரேனின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பிரிட்டிஷ் வணிகங்களுக்கு வாய்ப்புகளைத் திறக்கக்கூடும் என்றும் இங்கிலாந்து அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0