உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
67 பார்வைகள்

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் வளைகுடாவில் சிக்கியுள்ள கப்பல்களை மீட்கும் பணியை திங்கட்கிழமை முதல் அமெரிக்கா தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் திகதி கூறியுள்ளார்.

எனினும், எந்தெந்த நாடுகளுக்கு உதவி வழங்கப்படும் என்பதை அமெரிக்க ஜனாதிபதி தெளிவாகக் குறிப்பிடவில்லை.

ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முயற்சிக்கு 15,000 இராணுவ வீரர்கள், 100-க்கும் மேற்பட்ட தரை மற்றும் கடல் சார்ந்த விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் ஆதரவளிக்கப்படும் என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்து வழிகாட்டுவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவு போர் நிறுத்தத்தை மீறுவதாக அமையும் என்று ஈரான் அதிகாரிகள் இன்று 4 ஆம் திகதி எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, ட்ரம்பின் கருத்துகளுக்குப் பின்னர், ஹார்முஸ் நீரிணையில் அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் ஒரு எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 8 ஆம் திகதி அன்று ஈரான் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன, மேலும் தெஹ்ரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையில் ஈரான் தனது பிடியை இறுக்கியிருப்பது ஒரு முக்கிய சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வருகிறது.

மோதலின் போது நூற்றுக்கணக்கான கப்பல்களாலும், சுமார் 20,000 மாலுமிகளாலும் நீரிணையை கடக்க முடியது சிக்கித் தவித்துள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்பு கூறுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0