உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

விமானத்தின் அவசரகால கதவை திறந்து திடீரென பாய்ந்த பயணியினால் பரபரப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
56 பார்வைகள்

ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட ஏர் அரேபியா விமானம் ஒன்று இன்று அதிகாலை மே 03 ஆம் திகதி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, ​​ஓடுபாதையில் இருந்த விமானத்தின் அவசரகாலக்கதவைத் திறந்து பயணியொருவர் வெளியே குதித்துள்ளார்.

விமானம் மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததாலும், பிரதான ஓடுபாதையிலிருந்து விலகிச்சென்றதாலும் அந்த நபர் வெளியே குதித்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விமானப் பயணத்தின்போது சம்பந்தப்பட்ட பயணிக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


விமானப் பயணத்தின் போது அவர் இரண்டு முறை வாந்தி எடுத்ததாகவும், இந்தச் சம்பவத்தால் விமான நிலையப்பணிகளிலும் சிறிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பயணி தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் விதிகளை மீறியது குறித்து அதிகாரிகள் தற்போது விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0