உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

துருக்கியில் பதுங்கியிருந்த தாவூத் கூட்டாளி சலீம் டோலா பிடிபட்டது எப்படி?

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
49 பார்வைகள்

வெளி​நாடு​களில் இருந்து பென்​டானில், ஹெரா​யின், கோகைன் ஆகிய போதைப் பொருட்​கள் இந்​தி​யா​வுக்கு கடத்தி வரப்​படும் சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இதை முறியடிக்க இந்​திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்​சிபி) அதி​காரி​கள் கடந்த 3 ஆண்​டு​களுக்கு முன்பு “ஆபரேஷன் குளோபல் ஹன்ட்” என்ற ரகசிய நடவடிக்​கை​யைத் தொடங்​கினர்.

இதன்​படி என்​சிபி, மும்பை காவல் துறை, குஜ​ராத் தீவிர​வாத எதிர்ப்​புப் படை ஆகியவை ஒன்​றிணைந்து செயல்​பட்​டு, இன்​டர்​போல் உதவி​யுடன் சர்​வ​தேச போதை கும்​பல்​களை வேட்​டை​யாடும் பணி​யைத் தொடங்​கியது.

முதல்​கட்​ட​மாக உள்​நாடு, வெளி​நாடு​களில் செயல்​படும் 100-க்​கும் மேற்​பட்ட போதைப்​பொருள் கும்​பல்​களை ஒழிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டது. “ஆபரேஷன் குளோபல் ஹன்ட்” நடவடிக்​கை​யின் போது மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்​ராகிமின் நெருங்​கிய கூட்​டாளி சலீம் டோலா துருக்​கி​யில் பதுங்​கி​யிருப்​பது தெரிய வந்​தது. அவரை கைது செய்ய இன்​டர்​போல் மூலம் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரெட் கார்​னர் நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டது.

துருக்கி பாது​காப்​புப் படை​யினரின் நீண்ட தேடலுக்​குப் பிறகு இஸ்​தான்​புல் நகரில் சலீம் டோலா அண்​மை​யில் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர் அவர் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்​டார். கடந்த 28-ம் தேதி இந்​தி​யா​வுக்கு கொண்டு செல்​லப்​பட்ட டோலா, மும்பை நீதி​மன்​றத்தில் ஆஜர்​படுத்​தப்​பட்​டார்.

அவரை மே 8 ஆம் திகதி வரை போலீஸ் காவலில் விசா​ரிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது. இதன்​பேரில் அவரிடம் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இதுதொடர்​பாக போதைப் பொருள் தடுப்​புப் பிரிவு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: மகா​ராஷ்டிர தலைநகர் மும்​பை​யின் டோங்ரி பகு​தியை சேர்ந்த சலீம் டோலா, ஆரம்ப காலத்​தில் மும்​பை, டெல்​லி​யில் குட்கா விற்​பனை​யில் ஈடு​பட்டு வந்​தார். பின்​னர் அவருக்கு தாவூத் இப்​ராகி​முடன் தொடர்பு ஏற்​பட்​டது.

அதன்​பிறகு போதைப் பொருள் கடத்​தலில் ஈடு​படத் தொடங்​கி​னார். அப்​போது பலமுறை மும்பை போலீ​ஸிடம் அவர் பிடிபட்​டார். கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்பு இந்​தி​யா​வில் இருந்து வெளி​நாட்​டுக்கு சலீம் டோலா தப்​பியோடி​னார்.


இந்​திய போதைப் பொருள் தடுப்​புப்பிரிவு அதி​காரி​கள், “ஆபரேஷன் குளோபல் ஹன்ட்” நடவடிக்​கை​யின் மூலம் டோலா​வின் சர்​வ​தேச வலை​யமைப்பை கண்​டறிந்​தனர். மகா​ராஷ்டி​ரா​வின் சாங்​லி, குஜ​ராத்​தின் சூரத், ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய், துருக்​கி​யின் இஸ்​தான்​புல் நகரங்​களை மைய​மாக வைத்து டோலா செயல்​பட்டு வரு​வது தெரிய வந்​தது.

இதைத் தொடர்ந்து துபா​யில் வசித்து வந்த டோலா​வின் மகன் தாஹீர், மரு​மகன் முஸ்​தபா ஆகியோர் கைது செய்​யப்​பட்டு இந்​தி​யா​வுக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர். தற்​போது துருக்​கி​யின் இஸ்​தான்​புல் நகரில் சலீம் டோலா கைது செய்​யப்​பட்​டு, இந்​தி​யா​வுக்கு கொண்டு செல்​லப்​பட்​டார். பல்​கேரியா நாட்​டின் பாஸ்​போர்ட்​டில் ஹம்சா என்ற பெயரில் டோலா தலைமறை​வாக வாழ்ந்து வந்​துள்​ளார்.

அவர் கைது செய்​யப்​பட்டு இருப்​ப​தன் மூலம் இந்​தியா மட்​டுமன்றி சர்​வ​தேச அளவில் போதைப் பொருள் கடத்​தல் கும்​பல்​கள் பிடிபடும்​. இவ்​வாறு போதைப்​ பொருள்​ தடுப்​பு பிரிவு வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0