உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஒரு பவுன் தங்க மோதிரத்துடன் சுற்றி திரிந்த 4 அடி நீள பாம்பு ; தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்திய செய்திகள் 5 மாதங்கள் முன்
47 பார்வைகள்

ஒரு பவுன் தங்க மோதிரத்தில் சிக்கித் தவித்த சாரைப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம், கேரள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

கேரளாவில் புதிதாக வீடு கட்டி வரும் தம்பதியினர், வீட்டின் அருகே தற்காலிகமாக ஒரு ஷெட்டு அமைத்துத் தங்கியுள்ளனர். சம்பவத்தன்று அங்குள்ள மேசைக்குக் கீழே ஒரு பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் வழங்கினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், அங்கு சுமார் 4 அடி நீளமுள்ள ஒரு சாரைப்பாம்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

அந்தப் பாம்பின் உடலில் ஒரு பவுன் எடையுள்ள தங்க மோதிரம் ஒன்று பலமாகச் சிக்கியிருந்தது.
அந்த மோதிரத்திலிருந்து விடுபட முடியாமல் பாம்பு தவித்துக் கொண்டிருந்தது. பாம்பிற்கு அதிக வலி ஏற்படாத வகையில், வனத்துறையினர் அந்த மோதிரத்தை மிகவும் லாவகமாக வெட்டி பாம்பை மீட்டனர்.

மோதிரம் இறுக்கமாகச் சிக்கியிருந்ததால் பாம்பின் உடலில் ஏற்பட்ட காயத்திற்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அந்தப் பாம்பு பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்பட்டது.

தங்க மோதிரத்தில் பாம்பு சிக்கிய இந்த விசித்திரச் சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் சாப்பிட்ட முதல்வர் விஜய்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். காமராஜர் காலை உணவுத் திட்டம்தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்…

45 0 0
இந்திய செய்திகள்

மும்பையில் பாலத்தில் இருந்து பாய்ந்த BMW கார் – மூவர் உயி@ரிழப்பு!

மும்பையில் உள்ள ‘கோஸ்டல் வீதி’ (Coastal Road) பாலத்திலிருந்து அதிநவீன பிஎம்டபிள்யூ (BMW) கார் ஒன்று கீழே பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மற்றொருவர்…

44 0 0
இந்திய செய்திகள்

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்மையில் மேற்கொண்ட லண்டன் பயணத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து சரியான…

29 0 0
இந்திய செய்திகள்

“கேள்வி கேட்டால் பாட்டுப் பாடுகிறார்கள் – முதலமைச்சர் பஞ்ச் டயலொக் பேசுகிறார்” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்போது, ஆளுங்கட்சியினர் அதற்கு பதிலளிக்காமல் பாடல்களைப் பாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய…

47 0 0