உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியாவில் கடந்த ஆண்டில் டிஜிட்டல் நிதி மோசடிகளால் பாரிய பணத்தொகை இழப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
66 பார்வைகள்

2025 ஆம் ஆண்டில் மட்டும் டிஜிட்டல் நிதி மோசடிகளால் இந்தியர்களுக்கு 25 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான பாரிய தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4,300% அதிகரிப்பாகும் என்பதுடன், சுமார் 2.5 மில்லியன் மக்கள் இவ்வாறான மோசடிகளுக்குப் பலியாகியுள்ளனர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையைக்கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மோசடிக்காரர்கள் பெரும்பாலும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளங்களைப் போன்ற போலி இணைப்புகளை குறுஞ்செய்திகள் ஊடாக அனுப்பி வருகின்றனர்.

உதாரணமாக, போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துமாறு கோரி அனுப்பப்படும் செய்திகளில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்த முற்படும்போது, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் திருடப்படுகின்றது.

மேலும், உளவியல் ரீதியாக ஒருவரை அச்சப்படுத்தியோ அல்லது அவசர நிலையை ஏற்படுத்தியோ இவ்வாறான மோசடிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், சட்டங்களினால் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியாது என்றும், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களுடன் நுகர்வோர் விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டுமென நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0