உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

19 நாள் குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்க்கு ஆயுள் தண்டனை !

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

தனது 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையைக் கொலை செய்துவிட்டு, அந்தக் பழியை வேறொரு சிறுவன் மீது சுமத்த முயன்ற தாய்க்கு ஸ்காட்லாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவின் கிரீனாக் (Greenock) பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய நிக்கோல் பிளேன் (Nicole Blain) என்ற பெண், தனது கைக்குழந்தையான தியா வில்சனை (Thea Wilson) படுகொலை செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023 ஜூலை 14 ஆம் திகதி அன்று, குழந்தை தியா வில்சன் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் உடலில் விலா எலும்பு முறிவுகள் மற்றும் மண்டை ஓட்டில் மூன்று இடங்களில் விரிசல்கள் என காயங்கள் காணப்பட்டுள்ளன. இருப்பினும் குறித்த தாய் குழந்தையை தான் கொல்லவில்லை என வாதாடி வந்துள்ளார்.

மருத்துவப் பரிசோதனையில் குழந்தையின் காயங்கள் பலமான தாக்குதல்களாலும் (Blunt force trauma), குழந்தை பலமாக உலுக்கப்பட்டதாலும் (Shaken) ஏற்பட்டவை என உறுதி செய்யப்பட்டது.

இந்த கொலை செயலைச் செய்தது நிக்கோல் பிளேன் தான் என கிளாஸ்கோ உயர்நீதிமன்ற நடுவர்கள் ஏகமனதாகத் தீர்மானித்து தீர்ப்பளித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0