உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உணவின் சுவையா, தரமா எது முக்கியம்? ஆய்வில் கனேடியர்கள் அளித்த எதிர்பாராத பதில்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

கனேடியர்களில் 3,000 பேரிடம், உணவின் சுவையா, தரமா அல்லது எந்த உணவு சத்துள்ளது என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்களா என ஆய்வொன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

உணவு ஃப்ரெஷாக உள்ளதா, காலாவதி ஆக இன்னும் பல நாட்கள் உள்ளனவா என்றெல்லாம் பார்த்து வாங்கும் சில நாட்டவர்களில் கனேடியர்களும் அடங்குவர். ஆனால், கோவிட் காலகட்டம், உக்ரைன் போர், ஈரான் போர் போன்ற விடயங்கள், கனேடியர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன், காலாவதி திகதி பார்த்து உணவுப்பொருட்களை வாங்கும் கனேடியர்கள், எந்த உணவுப்பொருள் விலை குறைவாக கிடைக்கும் என பார்த்து வாங்கத் துவங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.

கனேடியர்களில் 3,000 பேரிடம், உணவின் சுவையா, தரமா எது முக்கியம், அல்லது, எந்த உணவு சத்துள்ளது என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்களா என ஆய்வொன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, சுவை, சத்து ஆகிய விடயங்களைவிட, தங்களால் ஒரு உணவுப்பொருளை வாங்க இயலுமா என்பதற்குத்தான் தாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு கூட்டத்தினர் தெரிவித்தார்கள்.

அதாவது, உணவுப்பொருட்களின் விலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இன்னும் தெளிவாக சொல்லப்போனால் விலை குறைவாக கிடைக்கிறதா என பார்த்து கனேடியர்கள் உணவுப்பொருட்களை வாங்கத்துவங்கியுள்ளார்கள் என்பது அந்த ஆய்வின் முடிவுகளிலிருந்து தெரியவந்தது.


Dalhousie பல்கலையின் Agri-Food Analytics Lab என்னும் ஆய்வமைப்பு நேற்று வெளியிட்ட அந்த ஆய்வின் முடிவுகளில், 45.5 சதவிகித மக்கள், உணவுப்பொருட்கள் வாங்கச் செல்லும்போது உணவின் சுவை, ஊட்டச்சத்து ஆகிய விடயங்களைவிட அதன் விலையைத்தான் முதலில் கருத்தில் கொள்வது தெரியவந்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் உணவுப்பொருட்கள் விலைதான் மிகவும் அதிகரித்துள்ளது என்று 81 சதவிகித மக்கள் கூறியுள்ள நிலையில், முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, சராசரி கனேடியர் ஒருவர் உணவுப்பொருட்களுக்காக மாதம் ஒன்றிற்கு சுமார் 23 டொலர்கள் கூடுதல் செலவிடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஆய்வில் தெரியவந்துள்ள இன்னொரு கொடுமையான விடயம் என்னவென்றால், 34 சதவிகித கனேடியர்கள், உணவுக்காக தங்கள் சேமிப்புகளில் கைவைப்பது மற்றும் கடன் வாங்குவது ஆகிய விடயங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0