உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

அவுஸ்திரேலியாவில் விமான விபத்து; இருவர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள பாராஃபீல்ட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, ​​விமானம் ஒன்று விமானக் கொட்டகையில் (ஹேங்கர்) மோதி விபத்துக்குள்ளானதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் ஊடகமான 7 நியூஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு விமானியும் அவருடன் பயணித்தவரும் உயிரிழந்ததாகவும், மேலும் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விபத்தினை அடுத்து விமானக் கொட்டகையிலிருந்து எழுந்த அடர்த்தியான கருப்புப் புகை அருகிலுள்ள பகுதி முழுவதும் பரவியுள்ளது.

மேலும், மக்கள் வீட்டிற்குள் இருக்குமாறு பெருநகர தீயணைப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0