உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

பாரீஸ் அருங்காட்சியகம் முன் சைக்கிளை நிறுத்திய இளைஞர்: திரும்பிவந்தபோது கண்ட காட்சி!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

பாரீஸிலுள்ள பிரபல அருங்காட்சியகம் முன் தனது சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்ற இளைஞர் ஒருவர், திரும்பிவந்து பார்க்கும்போது சுவாரஸ்ய காட்சி ஒன்றைக் கண்டார். அவரது சைக்கிளின் இருக்கைக்கு கீழே சுமார் 10,000 தேனீக்கள் கூடி அதை தேன்கூடு போல் மாற்றியிருந்தன.


பாரீஸிலுள்ள Louvre அருங்காட்சியகத்தின் முன் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அத்துடன், அந்த சைக்கிள் நிறுத்தப்பட்ட இடத்துக்கு அருகே மெட்ரோ ரயில் நிலையமும் இருந்தது. தகவல் கிடைக்கப்பெற்ற அதிகாரிகள், உடனடியாக மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயிலை மூடிவிட்டு, தேனீ வளர்ப்பவர் ஒருவரை அழைத்துள்ளனர்.

அந்த தேனீ வளர்ப்பவர் வந்து அந்த சைக்கிள் இருக்கையில் கீழ் கூடியிருந்த தேனீக்களை பாதுகாப்பாக தேனீக்கள் வளர்க்க பயன்படுத்தும் பெட்டி ஒன்றிற்குள் மாற்றி அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளார்.


அந்த சைக்கிளின் உரிமையாளர் இந்த காட்சிகளை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள நிலையில், அது தனது தாத்தாவின் சைக்கிள் என்றும், அதை தான் அருங்காட்சியகம் முன் நிறுத்தி அரை மணி நேரம் ஆவதற்குள் தேனீக்கள் அதன் இருக்கையை தேன்கூடு போல் மாற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0