உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

50 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் குற்றம் ; 77 வயது முன்னாள் ஆசிரியருக்கு சிறைத்தண்டனை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

வட அயர்லாந்தின் தெற்கு பெல்ஃபாஸ்டில் உள்ள பாடசாலை ஒன்றில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றிய வில்லியம் லாயிட்-லேவரி (William Lloyd-Lavery) என்பவர், மாணவிகளுக்கு இழைத்த பாலியல் அநீதிக்காகச் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 1970-களில் ரிச்மண்ட் லாட்ஜ் பாடசாலையில் (Richmond Lodge School) லாயிட்-லேவரி ஆசிரியராக இருந்தபோது, சுமார் 13 வயதுடைய நான்கு மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்து 50 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலுடன் முன்வந்து அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

வில்லியம் லாயிட்-லேவரி தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வந்த போதிலும், ஆறு வெவ்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0