உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அக்காவின் சடலத்தை தோண்டி வங்கிக்கு கொண்டு வந்த நபர் அதிர்ந்த அதிகாரிகள்!

இந்திய செய்திகள் 7 மாதங்கள் முன்
113 பார்வைகள்

பணத்தை எடுக்க வங்கி அதிகாரிகள் அலைக்கழித்ததால், நபர் ஒருவர் தனது அக்காவின் சடலத்தை தோண்டி வங்கிக்கு கொண்டு வந்துள்ளார்.

ஒடிசா மாநிலம், கியோன்ஜர் மாவட்டத்தின் மல்லிப்ஷி கிராமத்தில், வசித்து வருபவர் 50 வயதான ஜிது முண்டா. இவரது அக்கா கல்ரா முண்டா 2 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இவரது கணவர் மற்றும் குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதால், அவரது தம்பி ஜிது முண்டா மட்டுமே ஒரே உறவாக இருந்துள்ளார். கல்ரா முண்டா தனது கால்நடைகளை விற்றதன் மூலம் கிடைத்த 19,300 ரூபாயை, ஒடிசா கிராமின் வங்கி கணக்கில் வைத்திருந்தார்.

தனது அக்கா இறந்த பின்னர், வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக வங்கி கிளையை அணுகியுள்ளார். தனது அக்கா இறந்து விட்டார் என கூறிய நிலையில், இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், படிப்பறிவில்லாத ஜிது முண்டாவிற்கு இந்த ஆவணங்களை பெறும் வழிமுறை எதுவும் தெரியவில்லை.
வங்கியில் பணத்தை எடுக்க முடியாமல் விரக்தியடைந்த ஜிது முண்டா, தனது அக்கா புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று அவரது சடலத்தை தோண்டி வங்கிக்கு கொண்டு சென்று வைத்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். வங்கிக்கு வந்த காவல்துறையினர், வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுக்க உதவுவதாக ஜிது முண்டாவிற்கு உறுதியளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, காவல்துறையினரின் முன்னிலையில் அவரது சடலம் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. வங்கி ஊழியர்கள் தொடர்ந்து அலைக்கழித்ததால், வேறு வழியின்றி விரக்தியில் இவ்வாறு செய்ததாக ஜிது முண்டா தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள கியோன்ஜர் மாவட்ட துணை ஆட்சியர் உமா சங்கர் தலாய், “அந்த பழங்குடி இனத்தை சேர்ந்த நபருக்கு விதிமுறைகள் எதுவும் தெரியாது. அவர் விரக்தியில் இவ்வாறு செய்துள்ளார்.

வங்கி அதிகாரிகள் ஆவணங்களை கேட்டது சரிதான். ஆனால் அவருக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது. வங்கியுடன் ஆலோசித்து, சான்றிதழ்கள் பெறுவது, பணம் எடுப்பது குறித்து வழிவகை செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் : மு.க.ஸ்டாலின் பதிவு

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நீதிக்கட்சி பிறந்தது…

145 0 0
இந்திய செய்திகள்

மறைந்த எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (19) இரவு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

132 0 0
இந்திய செய்திகள்

‘ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ – வி.எஸ். பாபு மறைவுக்கு விஜய் உருக்கம்!

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது…

152 0 0
இந்திய செய்திகள்

தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு , உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் காலமானார்.…

149 0 0