உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்தோனேசிய ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
71 பார்வைகள்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 84 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு ரயில் நிறுவனம் செவ்வாயன்று ஏப்ரல் 28 ஆம் திகதி தெரிவித்தது.

இதற்கிடையில், இடிபாடுகளில் இன்னும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியை மீட்புக் குழுவினர் நிறைவு செய்தனர்.

ஜகார்த்தாவுக்கு வெளியே உள்ள பெகாசி என்ற இடத்தில், திங்கட்கிழமை இரவு ஒரு பயணிகள் ரயிலும் ஒரு நீண்ட தூர ரயிலும் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பெண்கள் மட்டுமே பயணிக்கும் பெட்டி ஒன்று இந்த விபத்தில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண்கள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான ஜகார்த்தாவில், பயணிகள் ரயில் சேவைகள் மிகவும் பரபரப்பானவை. 2024-இல் மேற்கு ஜாவா மாகாணத்தில் நடந்த ஒரு ரயில் மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0