உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
46 பார்வைகள்

டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்ட வொஷிங்டன் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது, அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய முயன்றதாக திங்களன்று 27 ஆம் திகதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

சந்தேக நபர் திங்களன்று வொஷிங்டன் டி.சி.யில் உள்ள நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட போது, ​​அவர் மீது இரண்டு துப்பாக்கிக் குற்றங்களும் சுமத்தப்பட்டன. அவர் தனது தரப்பு வாதத்தை முன்வைக்கவில்லை.

பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொள்ளும் வருடாந்திர ஆடம்பர சந்திப்பான வெள்ளை மாளிகை ஊடகவியலாளர்கள் சங்க இரவு விருந்தில், 31 வயதான கோல் டோமஸ் ஆலன் என்பவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் சனிக்கிழமை 25 ஆம் திகதி நடத்தப்பட்டது.

ஒரு ஹோட்டலில் நடந்த இந்தத் தாக்குதலின்போது, ​​ரகசிய சேவை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயம் அடைந்தார். இந்தச் சம்பவம், அமெரிக்காவில் தொடர்ச்சியாக நிகழும் அரசியல் வன்முறைகளின் அண்மைய நிகழ்வாகும்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மினசோட்டா மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் அவரது கணவரும் கொல்லப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர், கடந்த செப்டம்பரில் பழமைவாத அரசியல் ஆர்வலர் சார்லி கிர்க் ஒரு பேரணியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப் மீதே இரண்டு கொலை முயற்சிகள் குறிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0