உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்தம்: 3 கட்ட நிபந்தனைகளுடன் புதிய முன்மொழிவை வழங்கியது ஈரான்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான் அரசு புதிய முன்மொழிவு ஒன்றைப் பாகிஸ்தான் ஊடாக வழங்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் ஏப்ரல் 27 ஆம் திகதி நிறைவடையும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய திட்டத்தை ஈரான் முன்வைத்துள்ளது.

கடந்த வாரம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது.

ஈரான் பிரதிநிதிகள் அங்கு வருகை தந்த போதிலும், அமெரிக்கக் குழுவினர் கடைசி நேரத்தில் தமது பயணத்தை இரத்து செய்ததால் பேச்சுவார்த்தை முடைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மத்தியஸ்தக் குழுவிடம் தனது புதிய முன்மொழிவை ஈரான் கையளித்துள்ளது.

அமெரிக்காவின் ‘ஆக்சியோஸ்’ (Axios) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரான் பின்வரும் மூன்று நிலைகளை நிபந்தனைகளாக முன்வைத்துள்ளது.

போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். ஈரான் மற்றும் லெபனான் மீது இனி தாக்குதல்கள் நடத்தப்படாது என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டும்.

பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் படைகள் பின்வாங்கப்பட வேண்டும். அத்துடன், மூடப்பட்டுள்ள ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) திறக்கப்பட்டு, கடல்வழிப் போக்குவரத்து வழமைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும்.

மேற்கூறிய இரு நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, அணு ஆயுத உற்பத்தி நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் விவாதிக்க ஈரான் தயாராக உள்ளது.

“அணு ஆயுத உற்பத்தியை ஈரான் முழுமையாக நிறுத்துவதாக அறிவித்தால் மட்டுமே போர் நிறுத்தம் சாத்தியம்” என்பதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது. ஆனால், அணு ஆயுத விவகாரத்தை இறுதி நிபந்தனையாக ஈரான் மாற்றியுள்ளதால், இந்த புதிய முன்மொழிவை அமெரிக்கா ஏற்குமா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுகிறது.

இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைவதால், அடுத்தகட்டமாகப் போர் தீவிரமடையுமா அல்லது இராஜதந்திர ரீதியில் தீர்வு எட்டப்படுமா என்ற பதற்றம் சர்வதேச ரீதியில் அதிகரித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

95 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

92 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

99 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0