உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

புற்றரைக்கு தீ மூட்டிய விசமிகள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

அல்லைப்பிட்டி – மண்கும்பான் இடையே நண்டு தொழிற்சாலையின் முன்பகுதியிலுள்ள தரிசுக் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதில் பாரியளவிலான புற்றரைகள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

அத்துடன் இந்த தீயினால் ஏற்பட்ட புகையின் காரணமாக வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலையும் உருவானது.

ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் வீதியின் பிரதான போக்குவரத்து , வீதியில் இந்த நாசகார வேலையை விசமிகள் மேற்கொண்டதை சமூக நலன்விரும்பிகள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் நீர்வளம் வேகமாக வற்றி வரும் நிலையில் புற்களும் சருகாகிவரும் நிலை காணப்படுகின்றது.

இதனால் கால்நடைகளின் உணவுத் தேவையை நிவர்த்தி செய்யும் புற்றரைகளும் அற்றுவரும் நிலையில் இவ்வாறு விசமத்தனமாக தீ மூட்டல்களால் அவை முற்றாக அழிவுறும் பரிதாபநிலை ஏற்படுகின்றது.

எனவே இவ்வாறான தீமூட்டல் செயல்களை செய்வோர் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

52 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

18 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

78 0 0