உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

லண்டன் யூத சமூகத்தின் மீது தாக்குதல் முயற்சி: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
46 பார்வைகள்

லண்டனில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்கள் தொடர்பாக, பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் முக்கிய நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

லண்டனில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அவசர சிகிச்சை ஊர்திகள் (Ambulances) மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக, 37 வயதுடைய நபர் ஒருவரை லண்டன் மெற்போலிடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், டெவன் (Devon) பகுதியில் வைத்து நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் லண்டனில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் 23 ஆம் திகதி கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் ‘ஹட்சோலா’ (Hatzola) அவசர சிகிச்சை ஊர்திகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இதுவரை மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 8 பேர் மீது தீவைப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு பாரசீக மொழி ஊடக நிறுவனம் மீதும் எரியும் பொருட்கள் வீசப்பட்ட சம்பவமும் இதில் அடங்கும்.

ஈரான் நாட்டுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஹரக்கத் அஷாப் அல்-யமின் அல்-இஸ்லாமியா (Harakat Ashab al-Yamin al-Islamia) என்ற இஸ்லாமிய அமைப்பு, இந்த ஆம்புலன்ஸ் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் நடந்த சில சம்பவங்களுக்கும் இந்த அமைப்பே காரணம் என நம்பப்படுகிறது.

லண்டன் மெற்போலிடன் பொலிஸின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் இத்தாக்குதல்கள் குறித்த விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0