உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பு மாநகரசபையால் சுற்றுலாப் பயணிகளை கவர பல வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
95 பார்வைகள்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் அவர்களை கவரும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் அமைக்கப்பட்ட நடைபாதை, சூரிய மின் தொகுதி என்பன திறந்துவைக்கப்பட்டதுடன் பட்டத்திருவிழா மற்றும் பௌர்ணமி கலை விழா என்பன நேற்று மாலை நடாத்தப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி மேனகா, பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார், மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள், கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாநகரசபையினால் நான்கு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நடைபாதை திறந்துவைக்கப்பட்டதுடன் சூரிய சக்தியினால் இயங்கும் மின் ஒளி தொகுதியும் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின்போது பட்டக்கலைஞர்கள் பங்குகொண்ட பட்டத்திருவிழாவும் நடாத்தப்பட்டதுடன் இதன்போது 11 பட்டக்கலைஞர்களின் பட்டங்கள் பறக்கவிடப்பட்டதுடன் இதில் மூன்று பட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மாநகரசபையும் இணைந்து நடாத்தும் பௌர்ணமி கலை விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையிலும் கல்லடி கடற்கரைக்கு அதிகளவான மக்கள் பொழுதினை கழிக்க வரும் நிலையிலும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

55 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற…

73 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

55 0 0