உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

கொலம்பியாவில் குண்டுவெடிப்பு; பலர் உயிரிழப்பு.!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

கொலம்பியாவின் தெற்கு கௌகா பிராந்தியத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில், சிறுவர்கள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்னன.

இந்தத் தாக்குதலுக்கு லத்தீன் அமெரிக்காவின் பழமையான கிளர்ச்சிக் குழுவான ‘பார்க்’ அமைப்பிலிருந்து பிரிந்த தீவிரவாதக் குழுக்களே காரணம் என கொலம்பிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

“இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள். அவர்களை எமது சிறந்த வீரர்கள் எதிர்கொள்வார்கள்” என கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது ஒரு கண்மூடித்தனமான காட்டுமிராண்டித்தனம் என்றும், இந்தப் பயங்கரவாதத்தை கௌகா தனித்து எதிர்கொள்ள முடியாது என கௌகா பிராந்திய ஆளுநர் ஆக்டேவியோ குஸ்மான், தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவில் எதிர்வரும் மே 31-ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2016-ஆம் ஆண்டு எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் சிதைந்ததைத் தொடர்ந்து, சமீபகாலமாக அந்நாட்டில் அரசியல் வன்முறைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

கடந்த வருடம் ஜூன் மாதம் ஒரு பேரணியில் வலதுசாரி வேட்பாளர் மிகுயல் யூரிப் துர்பே மீது சிறுவனால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது நிலவும் சூழலில், ஆயுதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட இடதுசாரி செனட்டர் ஐவன் செபெடா தேர்தல் கருத்துக் கணிப்புகளில் முன்னிலையில் உள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கௌகா மற்றும் காலி ஆகிய நகரங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பேருந்து ஒன்று வெடிக்கத் தவறிய நிலையில் மீட்கப்பட்டதாகவும், இது ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் சதி எனவும் பாதுகாப்புத் அமைச்சர் பெட்ரோ அர்னால்போ சான்செஸ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0