உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

Gravesend பகுதியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
48 பார்வைகள்

இங்கிலாந்தின் Kent பகுதியில் உள்ள Gravesend நகரில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக மூன்று சிறுவர்களும் இரண்டு ஆண்களும் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கென்ட் காவல்துறையினருக்கு நேற்றுமுன்தினம்தகவல் கிடைத்ததின்படி, ஒரு இளம் பெண் தனியார் வீட்டில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் இரண்டு ஆண்களும் மூன்று சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.

33 வயதான ஐஒனுட் டோப்ரே (Ionut Dobre ) மீது பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதேபோல், 16 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 15 வயதுடைய ஒரு சிறுவனும் அதே குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலும், 46 வயதான பெனோனே இனோஃப்டே (Benone Inofte) மீது பாலியல் வன்கொடுமைக்கு உதவியதாக (aiding and abetting) குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஐந்து பேரும் கென்ட் பகுதியில் உள்ள மெட்வே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வழக்கு தென் கிழக்கு லண்டனில் உள்ள வூல்விச் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெரியவர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மூன்று சிறுவர்களில் இருவர் சிறுவர் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் உள்ளூர் அதிகாரிகளின் பராமரிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0