உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

அமெரிக்க – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பாகிஸ்தான்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
47 பார்வைகள்

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானியர்கள் நேரில் பேச விரும்புவதால், அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை இன்று இஸ்லாமாபாத்திற்கு அனுப்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானின் உயர் மட்ட அதிகாரிகளை மட்டுமே சந்திப்பார் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியுள்ள நிலையில் அவரிடமிருந்து வேறுவிதமான செய்தி வெளியாகியுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே எந்த சந்திப்பும் நடைபெற திட்டமிடப்படவில்லை எனவும் ஈரானின் கருத்துக்கள் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

ஈரானில் தற்போது பொறுப்பில் உள்ளவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார்.

அத்துடன் ஈரான் ஒரு சலுகையை முன்வைக்கிறது, அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் ஆனால் அந்த சலுகை என்னவென்று அவருக்கு இன்னும் தெரியவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தர்.

அமெரிக்க – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டத்தை நடத்த பாகிஸ்தான் தயாராகி வருவதால், இஸ்லாமாபாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு நிறுவப்பட்டுள்ளதுடன் முக்கிய வீதிகள் மூடப்பட்டு பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0