உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
45 பார்வைகள்

சர்வதேச சந்தையில் இன்று 25 ஆம் திகதி தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக, மத்திய கிழக்கு போர் ஆரம்பமான காலப்பகுதியில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,000 டொலரை கடந்திருந்தது.

எனினும், தற்போது ஒரு அவுண்ஸ் தங்கம் 4,708 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகிறது.
அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளி 75.69 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் இன்று இலங்கையிலும் தங்கவிலை வீழ்ச்சியை பதிவு செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இலங்கையிலும் நேற்று 24 ஆம் திகதி தங்கவிலை 2,000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0