உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் பஹ்லவி மீது தக்காளி வீசி தாக்குதல்!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
91 பார்வைகள்

ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி மீது தக்காளி கெட்ச்அப்(புளிப்பு சுவையூட்டி) வீசப்படும் காணொளி ஒன்றை ஈரானிய அரசு ஊடக நிறுவனம் பகிர்ந்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட 47 வினாடி காணொளி ஒன்றில், ஜெர்மனியின் பெர்லினில் ஒரு கட்டிடத்திலிருந்து பஹ்லவி வெளியே வந்தபோது, ​​ஒருவர் அவர் முதுகில் சிவப்பு நிற திரவத்தை வீசித் தாக்கும் சம்பவம் காட்டப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்காக சைப்ரஸில் ஐரோப்பியத் தலைவர்கள் கூடத் தயாரான நிலையில், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளைக் கைவிடுமாறு ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸிடம் பஹ்லவி அழைப்பு விடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஈரானில் உள்ள ஆட்சியின் மீது மேலும் அழுத்தம் கொடுக்குமாறு அவர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஐரோப்பா செய்யக்கூடிய பல காரியங்கள் இருக்கின்றன, ஆனால் அது இன்னும் செய்யவில்லை.

மரணதண்டனைகளை நிறுத்துமாறு ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்து எதுவும் செய்யப்படவில்லை. அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தவும் எதுவும் செய்யப்படவில்லை. தங்கள் சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து போராடும் ஈரானியர்களின் குரலாக இருப்பதற்காக பெர்லினுக்கு வருகின்றேன்” என ரெசா பஹ்லவி கூறியுள்ளார்.

ஊடகங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்துவது, ஈரானியப் புலம்பெயர்ந்தோரைச் சந்திப்பது மற்றும் ஜெர்மன் நாடாளுமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது ஆகியவை குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல்!

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து…

139 0 0
உலக செய்திகள்

ரோஹிங்கியா மக்களுக்கு நடந்தது இன அழிப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக…

145 0 0
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்க பிரித்தானியா தீர்மானம்

ரஷ்யாவின் முன்னரங்கப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, உக்ரைனுக்கு 1,000 நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன் வானுர்திகளை வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. உக்ரைனுக்கு…

145 0 0
உலக செய்திகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு: ட்ரம்ப், புடின், மற்றும் சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி…

144 0 0