உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

உலக சமாதானத்துக்கு லண்டனில் சண்டி ஹோமம்! ஈலிங் அம்மன் ஆலயத்தில் நிகழ்வு!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
59 பார்வைகள்

லண்டனில் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சைவ ஆலயமான ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில், உலக நன்மை மற்றும் அமைதி வேண்டி சிறப்பு சண்டி ஹோமம் இன்று ஏப்ரல் 24 ஆம் திகதி மிகச் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.

இந்தச் சண்டி ஹோம நிகழ்வுகள் எதிர்வரும் (03.05.2026) ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளன.துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் சண்டி ஹோம மந்திர முழக்கங்களுடன் தீவளர்ப்பு நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

மத்திய கிழக்கில் போர்நெருக்கடி தொடர்வதால் உலகின் அமைதி சீர்குலைந்த நிலையில் உலக சமாதானத்தை வேண்டி இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக ஆலயம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆலயத்துக்கான புதிய நிர்வாக சபை அண்மையில் தெரிவு செய்யப்பட்ட பின்னர், இடம்பெறும் முதலாவது முக்கிய நிகழ்வாக இந்த சண்டி தீவளர்ப்பு நிகழ்வு இருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

97 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0